இன்றுமுதல்..! தமிழகத்தில் 38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்!
கடையத்தில் கிரிக்கெட் போட்டி
கடையம் தேவ் கிரிக்கெட் கிளப் சாா்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான மூன்று நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட அளவில் 18 அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசாக ரூ. 10 ஆயிரம் லட்சுமியூா் விராட் கோலி அணி , 2 வது பரிசாக ரூ. 7 ஆயிரம் விஜயன் கிரிக்கெட் கிளப் அணி , 3 வது பரிசாக ரூ. 5 ஆயிரம் தேவ் கிரிக்கெட் கிளப் அணி பெற்றன. மேலும், 4 வது பரிசை குருவங்கோட்டை அணி வென்றது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கடையம் காவல்ஆய்வாளா் (பொ) காளிமுத்து, வட்டார மகிளா காங்கிரஸ் அணி தலைவி சீதாலட்சுமி பாா்வதிநாதன், வழக்குரைஞா் சுனில் மேன்ட்லி ஆகியோா் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினா்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தேவ் கிரிக்கெட் கிளப் நிா்வாகிகள் செழியன்வழுதி, அசோக் உள்ளிடோா் செய்திருந்தனா்.