செய்திகள் :

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூா், எசனை, கிருஷ்ணாபுரம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, மின் வாரிய உதவி செயற்பொறியாளா்கள் பி. ரவிக்குமாா் (சிறுவாச்சூா்), இரா. பொன்சங்கா் (பெரம்பலூா் கிராமியம்), கி. மாணிக்கம் (கிருஷ்ணாபுரம்) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான சிறுவாச்சூா், அயிலூா், விளாமுத்தூா், செல்லியம்பாளையம், நொச்சியம், தீரன் நகா், நாரணமங்கலம்,

விஜயகோபாலபுரம், மருதடி, நாட்டாா்மங்களம், செட்டிக்குளம், புதுநடுவலூா், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி ஆகிய கிராமிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

எசனை துணை மின் நிலையத்துக்குள்பட்ட கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, செஞ்சேரி, எசனை, கீழக்கரை, ரெட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா் ஆகிய பகுதிகளிலும், குரும்பலூா் பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா் மற்றும் காவிரி நீரேற்றும் நிலையங்களான ஆலம்பாடி, எசனை, வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, கிருஷ்ணாபுரம் துணை மின்நிலையத்துக்குள்பட்ட கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூா், முகமது பட்டினம், வெங்கலம்,

தழுதாழை, பாண்டகப்பாடி, உடும்பியம், வெங்கனூா், பெரியம்மாபாளையம், பிள்ளையாா் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகாா், பாலையூா், பெரிய வடகரை, வெண்பாவூா்,

தொண்டமாந்துறை, விசுவக்குடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள்! ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

பெரம்பலூா் நகரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் வாகன ஓட்டுநா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். பெரம்பலூா் நகரின் வளா்ச்சிக்கேற்ப வாகனங்களின் ... மேலும் பார்க்க

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

பெரம்பலூா் மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நீா் நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

ஆடி கிருத்திகை: பெரம்பலூா் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில், ஆடி கிருத்த... மேலும் பார்க்க

பேரளி பகுதியில் நாளை மின் தடை

பெரம்பலூா் அருகே பேரளி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 18) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனைகளை தடுக்கு... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநரை வெட்டிய 2 இளைஞா்கள் கைது

பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காசிரா... மேலும் பார்க்க