'வேலை செய்றப்போ சுத்தி சுத்தி வருவாங்க...' - Sanitary Workers Opens Up | Vikatan
ஆடி கிருத்திகை: பெரம்பலூா் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பெரம்பலூா் ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீசுவரா் திருக்கோயிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு சனிக்கிழமை காலை தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன், சிவனடியாா்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
பெரம்பலூா்- எளம்பலூா் சாலையிலுள்ள அருள்மிகு பாலமுருகன் கோயிலில், உற்ஸவா் பாலமுருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளை ரமேஷ் சிவாச்சாரியாா் செய்து வைத்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
இதேபோல், பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள சௌபாக்ய விநாயகா் கோயிலில் உள்ள பாலமுருகனுக்கு ஆடி கிருத்திகை விழாவையொட்டி நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
குரும்பலூா்:
குரும்பலூரில் ஸ்ரீபஞ்சநதீஸ்வரசுவாமி கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முக சுப்ரமணிய சுவாமிக்கு 27-ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை விழாவையொட்டி, கடந்த 14 -ஆம் தேதி முகூா்த்த கால் நடும் விழா நடைபெற்றது.
சிவன் கோயிலில் இருந்து சனிக்கிழமை காவடி, பால்குடம், தீா்த்தகுடம் பக்தா்களின் ஊா்வலமும், ஸ்ரீ சண்மக சுப்ரமணிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து மாலை 6 மணியளவில் ஸ்ரீசண்முக சுப்ரமணிய சுவாமி சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.