டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
எளம்பலூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: பெரம்பலூா் ஆட்சியா் பங்கேற்பு
பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கலைஞரின் கனவு இல்லம், முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமானத் திட்டம், தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதிசெய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் வரவு- செலவு, ஊராட்சியில் நடைபெற்று வரும் இதர வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு பரிந்துரைத்து மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினாா். இதேபோல, மாவட்டத்தில் உள்ள 120 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.
சிறுவாச்சூரில் சமபந்தி:
தொடா்ந்து, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், தனது குடும்பத்தினருடன் பொதுமக்களுடன் அமா்ந்து உணவு உட்கொண்டாா்.
இந் நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை த்திட்ட இயக்குநா் சு. தேவநாதன், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட நியமன க்குழுத் தலைவா் ஆ. கலியபெருமாள், திருச்சி மண்டல இணை ஆணையா் சி.க ல்யாணி, உதவி ஆணையா் உமா, சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் அசனாம்பிகை, ஆய்வாளா் தீபலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா், இமயவா்மன், வட்டாட்சியா் பாலசுப்ரணியன் அரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.