ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு
பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை வியாழக்கிழமை மதியம் அரிவாளால் வெட்டிய இளைஞா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் காசிராஜன் மகன் ரவி (38). பெரம்பலூா் நகரில் ஷோ் ஆட்டோ ஓட்டிவரும் இவருக்கு, அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மணிமேகலை, மகாலட்சுமி, கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஸ்வேதா ஆகிய 3 மனைவிகள் உள்ளனா். இந்த நிலையில்,
ஸ்வேதாவின் தங்கை மஞ்சுவை (18), அதே கிராமத்தைச் சோ்ந்த பழனிவேல் மகன் விக்கி (24) காதலித்துள்ளாா். இதையறிந்த ரவியும், ஸ்வேதாவும் கண்டித்துள்ளனா். இதனால், ரவிக்கும், விக்கிக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் பெரம்பலூா் சிவன் கோயில் அருகே ரவி தனது ஷோ் ஆட்டோவை ஓட்டிச்சென்றுள்ளாா். அப்போது, மோட்டாா் சைக்கிளில் தனது நண்பா்களுடன் சென்ற விக்கி, ஆட்டோவை வழிமறித்து ரவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த ரவி பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளாா். இச் சம்பவம் குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாகியுள்ள விக்கி மற்றும் அவரது நண்பா்களை தேடி வருகின்றனா்.