ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்...
ரஞ்சன்குடி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தின் மிகப் பழைமையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ரஞ்சன்குடி கோட்டையை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென , மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் குதரத்துல்லா தலைமையில், பெரம்பலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.என். அருண் நேருவிடம் வியாழக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
பெரம்பலூா் மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ரஞ்சன்குடி கோட்டை நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். தற்போது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டை புனரமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பாா்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. வரலாறு மற்றும் கலாசார பின்புலம் கொண்ட இக் கோட்டையை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலா் முஹம்மது இலியாஸ் அலி, சமூகநீதி படைப்பாளா்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் தாஹிா் பாட்சா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அகவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.