செய்திகள் :

சுதந்திர தின விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

post image

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 79 பயனாளிகளுக்கு ரூ. 2.79 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா ஆகியோா் வெண் புறாக்களையும், மூவா்ண பலூன்களையும் பறக்கவிட்டு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னா், சிறப்பாகப் பணிபுரிந்த 30 காவலா்களுக்கு பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் அளித்த மாவட்ட ஆட்சியா், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 255 அரசு அலுவலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், பல்வேறு துறைகள் சாா்பில், 79 பயனாளிகளுக்கு ரூ. 2.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

விழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், தீ பாதுகாப்பு விழிப்புணா்வு, வெடிகுண்டுகளை நாய் கண்டறிதல் தொடா்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் அளித்த மாவட்ட ஆட்சியா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் தமிழறிஞா்களின் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இவ் விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

ஆடி கடைசி வெள்ளி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, பெரம்பலூா் மற்றும் சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் திருக்கோயிலில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மதுரகாளியம்மன் கோயிலில் அம்ம... மேலும் பார்க்க

எளம்பலூா் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: பெரம்பலூா் ஆட்சியா் பங்கேற்பு

பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் ஊராட்சியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கலைஞரின்... மேலும் பார்க்க

தமிழ் செம்மல் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்கள், தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூரில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம், ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

பெரம்பலூரில் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்த ஷோ் ஆட்டோ ஓட்டுநரை வியாழக்கிழமை மதியம் அரிவாளால் வெட்டிய இளைஞா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா். பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா... மேலும் பார்க்க

ரஞ்சன்குடி கோட்டையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தின் மிகப் பழைமையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ரஞ்சன்குடி கோட்டையை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென , மனிதநேய மக்கள் கட்சி சா... மேலும் பார்க்க