செய்திகள் :

ஜிஎஸ்டி சீர்திருத்த நம்பிக்கையில் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றம்!

post image

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் உயர்ந்து முடிவடைந்தன.

டிரம்ப் மற்றும் புடின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், எஸ் அண்ட் பி இந்தியாவின் மதிப்பீட்டை மேம்படுத்தியதும் மற்றும் அக்டோபர் மாதத்திற்குள் மத்திய அரசு ஜிஎஸ்டி கட்டமைப்பை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிவடைந்தன.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 676.09 புள்ளிகள் உயர்ந்து 81,273.75 ஆகவும், நிஃப்டி 245.65 புள்ளிகள் உயர்ந்து 24,876.95 புள்ளிகளாக நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு ஒரு சதவிகிதம் உயர்ந்த நிலையில், ஸ்மால் கேப் குறியீடு 1.4 சதவிகிதம் அதிகரித்தது.

வர்த்தகத்தின் முதல் நாளன்று, நேர்மறையான குறிப்பில் தொடங்கிய பங்குச் சந்தை, பல்வேறு துறைகளில் உயர்வு நீடித்ததால், நிஃப்டி 25,000 என்ற புள்ளிகளை நோக்கு செல்ல இது பெரிதும் உதவியது.

நிஃப்டி-யில் மாருதி சுசுகி, நெஸ்லே, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகியவை உயர்ந்தும், அதே நேரத்தில் ஐடிசி, டெக் மஹிந்திரா, எடர்னல், எல் அண்ட் டி, என்டிபிசி ஆகியவை சரிந்து முடிந்தன.

சென்செக்ஸில் மாருதி 8.94 சதிவிகிதம் உயர்ந்த நிலையில், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் டிரென்ட் ஆகியவை உயர்ந்த நிலையில் ஐடிசி, எடர்னல், டெக் மஹிந்திரா மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை சரிந்து முடிந்தன.

ஐடி, மீடியா மற்றும் மின்சாரம் தவிர, மற்ற அனைத்து துறைகளும் உயர்ந்து முடிந்தன. ஆட்டோ குறியீடு 4 சதவிகிதம், நுகர்வோர் குறியீடு 3 சதவிகிதம், ரியல் எஸ்டேட் 2 சதிவிகிதம் உயர்ந்தன. அதே நேரத்தில் உலோகம், எஃப்எம்சிஜி, தொலைத்தொடர்பு, தனியார் வங்கி ஆகியவை 1 முதல் 2 சதிவிகிதம் வரை உயர்ந்தன.

நசாரா டெக்னாலஜிஸ் மற்றும் டெல்டா கார்ப் ஆகியவை 40 சதவிகித ஜிஎஸ்டியை ஈர்க்கும் என்ற அச்சத்தால் தலா 2 சதிவிகிதம் சரிந்தன.

முதல் காலாண்டு இழப்புகள் குறைந்ததால் வோடபோன் ஐடியா பங்குகள் 5 சதிவிகிதம் உயர்ந்த நிலையில், முதல் காலாண்டில் நிலையான முடிவுகளால் அசோக் லேலேண்ட் பங்குகள் 8 சதிவிகிதம் உயர்ந்தன.

ஜிஎஸ்டி மாற்றியமைக்க வாய்ப்புள்ளதால் சிமென்ட் மற்றும் ஆட்டோ பங்குகள் 8 சதிவிகிதம் வரை உயர்ந்தன. அதே நேரத்தில் எஸ் அண்ட் பி மேம்படுத்தல் மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையால் வங்கி மற்றும் நிதி பங்குகள் 6 சதிவிகிதம் வரை உயர்ந்தன.

ஐரோப்பிய சந்தைகள் சரிந்த நிலையில், கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.62 சதிவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 66.25 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதையும் படிக்க: கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவு!

புதுதில்லி: வலுவான உள்நாட்டு பங்குச் சந்தைகளின் ஆதரவுடன் இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 23 காசுகள் உயர்ந்து ரூ.87.36 ஆக நிறைவடைந்தது.பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் ... மேலும் பார்க்க

ஐபோன் 17 தயாரிப்பு இந்தியாவில் தொடக்கம்!

இந்தியாவில் ஐபோன் 17 தயாரிப்புப் பணிகள் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஐபோன் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் ஆப்பிள் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் தயாரிப்புப் பணிகள் தொடங்கிய... மேலும் பார்க்க

கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!

ஓப்போ எஃப் 31 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மார்ச் மாதம், எஃப் 29 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், இந்த ஆண்டில் இரண்ட... மேலும் பார்க்க

ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் பேசலாம்! ஹானர் எக்ஸ் 7 சி அறிமுகம்!

ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஆக. 18) அறிமுகமாகியுள்ளது. எனினும், இதன் விற்பனை ஆக. 20ஆம் தேதி முதல் தொடங்கும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹானர் நிறுவனக் கிளைகளிலும், இணைய... மேலும் பார்க்க

கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!

புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் வரையான காலாண்டில் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,637 கோடியாக உள்ளது. அதே வேளையில், நிறுவனம் தனது வலுவான வீட்டுவசதி தேவை... மேலும் பார்க்க

இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!

புதுதில்லி: கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக நம்பிக்கை அறிந்த வட்டாரங்கள் மூலம் தகவல் தெரிய வருகின்றன.சாம்சங் அதன் கிரேட்டர... மேலும் பார்க்க