செய்திகள் :

எதிர்க்கட்சியினர் - குரங்குகள்? மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சனத்தால் சர்ச்சை!

post image

கேரளத்தில் வாக்கு முறைகேடு குறித்த கேள்விக்கு எதிர்க்கட்சியினரை குரங்குகள் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி விமர்சித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கேரள மாநிலத்தின் திரிசூரில் உள்ள சக்தன் தம்புரான் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமையில் மாலை அணிவிக்க அத்தொகுதி எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், திரிசூர் தொகுதியில் வாக்கு முறைகேடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளிக்கையில், உங்களின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும். நான் ஏன் பதிலளிக்க வேண்டும்? நான் அமைச்சர்; எனக்கு முடிக்க வேண்டிய பணிகள் உள்ளன. பதிலளிக்க வேண்டியவர்கள் பதிலளிப்பார்கள். அல்லது இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் செல்லும்வரையில் காத்திருங்கள். அல்லது அதற்கு பதிலாக, குற்றச்சாட்டுகளை எழுப்பிய சில வானரங்களிடம் (குரங்குகள்) கேளுங்கள்’’ என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு கேரளத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரின் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அம்மாநில கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிகாரில் வாக்குகள் திருடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வரும்நிலையில், இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் வாக்குரிமைப் பேரணியும் நடைபெற்று வருகிறது.

பிகார் மட்டுமின்றி, 2024 மக்களவைத் தேர்தலின்போது கேரள மாநிலத்தின் திரிசூர் தொகுதியில் வாக்கு முறைகேடுகள் நடத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன.

இதுகுறித்து, அத்தொகுதி எம்.பி.யும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இருப்பினும், கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில்தான், எதிர்க்கட்சிகள் குறித்த அவரின் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க:இந்தியாவுக்கு அஞ்சி பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம்!

Kerala Minister slams Suresh Gopi's 'Vanara' remarks in voters' list manipulation issue

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

ஒடிஸா முன்னாள் முதல்வரும் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று (ஆக. 18) விடியோ வெளியிட்டுள்ளார். சிகிச்சைக்காக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையி... மேலும் பார்க்க

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி திங்கள்கிழமை மாலை தில்லி வந்தடைந்தார்.மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், தில்லி விமான நிலையத்துக்கு நேரில் சென்று அவரை வரவேற்ற நிலை... மேலும் பார்க்க

டிரம்ப்புடன் பேசியது என்ன? பிரதமர் மோடியுடன் பகிர்ந்த ரஷிய அதிபர்!

பிரதமர் நரேந்திர மோடியை ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசியில் தொடர்புகொண்டு இன்று (ஆக. 18) பேசினார். இதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கடந்த வாரம் நடத்திய ஆலோசனையின் மதிப்பீடுகள் குறித... மேலும் பார்க்க

‘பாஜக கைகளில் இருக்கும் பொம்மை’: தேர்தல் ஆணையம் மீது மஹுவா மொய்த்ரா எம்.பி. சாடல்!

தேர்தல் ஆணையமே ‘பாஜகவின் கைகளில் இருக்கும் பாவை போலச் செயல்படுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்று மக்களவை எம்.பி. மஹுவா மொய்த்ரா விமர்சித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தை விமர்சித... மேலும் பார்க்க

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.வானிலை மையத்தின... மேலும் பார்க்க

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வே... மேலும் பார்க்க