ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான்; அதிமுக பலவீனமாக இருக்கிறது: சசிகலா
அதிமுக பலவீனமாகத்தான் இருக்கிறது என்றும் அதனைச் சரிசெய்யவே தான் இருப்பதாகவும் வி.கே. சசிகலா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அதிமுக இப்போது வரை பலவீனமாகவே உள்ளது. அதை மாற்றுவதுதான் என் வேலை. அதைச் செய்யாவிட்டால் மக்களுக்கு அதிக சிரமம் ஆகிவிடும்.
அதிமுகவில் நிலவும் சிக்கலை புதிதாக வந்த யாராலும் தீர்க்க முடியாது. அனுபவம் வாய்ந்தவர்களால் மட்டுமே தீர்க்க முடியும்.
ஓபிஎஸ்ஸை சந்தித்தது உண்மைதான். ஜெயலலிதாவின் ஆட்சியை நிச்சயம் கொண்டு வருவோம். சொல்வதை நிச்சயம் நான் செய்வேன். ஏனென்றால் எனக்கு அரசியலில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.
சிலர் அரசியலுக்கு வந்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள். இதில் இருப்பவர்களுக்குதான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.
திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறது. மக்களுக்கும் இப்போது புரிந்துவிட்டது. தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கும் திமுகவின் கனவு நிறைவேறாது" என்று கூறினார்.