கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!
ரூ.10,000-க்கு நிறைவான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்! அறிமுகமானது இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ!
இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் அதிக பேட்டரி திறனுடனும், திரை தரத்துடனும் வருவதால், பயனர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இன்ஃபினிக்ஸ் நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையில், குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
அனைத்து நிறுவனங்களுமே 5ஜி ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்காக இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ என்ற 5ஜி ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதில், ஒரே ஒரு வேரியன்ட் மட்டுமே உள்ளது. 4GB உள்நினைவகம் 128GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 9,299 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கி வழங்கும் சலுகைகள் கழிய, ரூ. 8,999க்கு ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆக. 21 முதல் இதன் விற்பனை தொடங்குகிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
இன்ஃபினிக்ஸ் ஹாட் 60 ஐ ஸ்மார்ட்போனுக்கு 6.75 அங்குல திரை கொடுக்கப்பட்டுள்ளது.
திரைக்கு 720 x 1600 பிக்சல் உடன் நீர்புகாத்தன்மைக்காக IP64 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
மீடியாடெக்டைமன்சிட்டி 6400 புராசஸர் உடையது.
நினைவக திறனை 2TB வரை விரிவாக்கம் செய்துகொள்ளலாம்.
பின்புறத்தில் 50MP முதன்மை கேமராவும், செல்ஃபி பிரியர்களுக்காக 5MP முன்பக்க கேமரா உடையது.
6000mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 18W திறன் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 20% வளா்ச்சி கண்ட இந்திய கைக்கணினிச் சந்தை