கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!
Upendra: 'இந்த கண் பழக்கம்தான் என்னோட ப்ளஸ்'- வைரலாகும் உபேந்திரா வீடியோ
கன்னட சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் வலம் வருபவர் உபேந்திரா.
கன்னட திரையுலகில் 1992-ம் ஆண்டு 'Tharle Nan Maga' என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் 'Upendra', 'Preethse', 'Raktha Kanneeru', Nagarahavu, Anatharu, Budhivanta, மற்றும் Super , Shrimathi , 'Kalpana';, 'Uppi 2' என பல படங்களை இயக்கி, நடித்து சிறந்த நடிப்பிற்காகவும், இயக்கத்திற்காவும் பல விருதுகளைக் குவித்திருக்கிறார்.

தமிழில் விஷாலின் 'சத்யன்' படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு 17 வருடங்கள் கழித்து ரஜினியின் 'கூலி' படத்தில் நடித்திருக்கிறார். கன்னட சினிமாவின் முடிசூடா இளவரசராக வலம் வந்த உபேந்திராவுக்கு வேகமாக கண் அசைக்கக்கூடிய ஒரு அரிய பழக்கம் ஒன்று இருந்திருக்கிறது.
அதனை அவர் எப்படி பயன்படுத்திக்கொண்டார் என்பதை நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். "எனக்கு ஒரு அரிய பழக்கம் உள்ளது. அதன் படி, என்னால் விரைவாகவும், கூர்மையாகவும் கண்களை அசைக்க முடியும்.

என்னுடைய இந்தப் பழக்கத்தின் மூலம், கண் நடிப்பை பவர்ஃபுல்லாக, மறக்கமுடியாததாகவும் மாற்றினேன்" என்று கூறியிருக்கிறார். அதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Upendra's iconic eye movement !!
— @egoglow_07 (@egoglow_07) August 17, 2025
pic.twitter.com/fz79ji5Daq
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...