செய்திகள் :

தேர்தல் ஆணையம் சொன்னது பொய்; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறேன் - அகிலேஷ் யாதவ்

post image

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் யாரும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் சொன்ன நிலையில், தான் செய்த பிரமாணப் பத்திரத்தின் நகலை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.

வாக்குத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்திருந்தார்.

அப்போது, உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியல் குறித்து யாருமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்த நிலையில், தான் கொடுத்த பிரமாணப் பத்திரத்துக்கான உறுதிப்படுத்தும் ரசீதையும், பிரமாணப் பத்திரத்தின் நகலையும் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, வாக்குத் திருட்டுப் புகார் அளிப்பவர்கள், அதனை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கோரியிருந்த நிலையிலும் யாரும் தாக்கல் செய்யவில்லை என்று ஞானேஷ்குமார் கூறியிருந்த நிலையில், அது உண்மையில்லை என்று அகிலேஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரமாணப் பத்திரம் கிடைக்கப் பெற்றதற்காக மின்னஞ்சலில் ரசீதையும் வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக 18 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.

மும்பையில் மழை வெள்ளத்தில் தத்தளித்த பள்ளி வேன்: குழந்தைகளைப் பத்திரமாக கரைசேர்த்த போலீஸாருக்கு பாராட்டு!

மும்பை: மும்பையில் பள்ளி வேனிலிருந்த குழந்தைகள் சிலர் மழை வெள்ளத்தில் தத்தளித்த நிலையில், அந்தக் குழந்தைகளை போலீஸார் பத்திரமாக கரை சேர்த்த காணொலி சமூக ஊடகங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.வானிலை மையத்தின... மேலும் பார்க்க

டிரம்மில் அழுகிய உடல்: மனைவி, குழந்தைகள் மாயம்; நடந்தது என்ன?

ராஜஸ்தானில் அல்வாரில் டிரம்மில் அழுகிய ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் திஜாரா மாவட்டத்தில் உள்ள ஆதர்ஷ் காலனியில் நடைபெற்றது. வீட்டு உரிமையாளர், அவரின் மகள் ஏதோ வே... மேலும் பார்க்க

அசாமில் ஒரே மாதத்தில் 7-வது முறையாக நில அதிர்வு!

அசாம் மாநிலத்தில் இன்று(ஆக. 18) பிற்பகல் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது. நாகோன் மாவட்டத்தில் இன்று உணரப்பட்ட நில அதிர்வினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்ப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு அஞ்சி பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவுக்கு பயந்து பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்தியாவின் தாக்குதலில் இருந்து... மேலும் பார்க்க

இந்தூரில் சுவர் இடிந்து 3 தொழிலாளர்கள் பலி, ஒருவர் காயம்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கனமழையின்போது கட்டுமானத்தில் இருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.இந்தூரில் பெய்துவரும் கனமழையின் காரணமாகக் கட்டுமானப் பணியிலிருந்த 13 ... மேலும் பார்க்க

ஜனநாயகத்தை நசுக்கும் முயற்சியை எதிர்ப்போம்! கார்கே

ஜனநாயகத்தை நசுக்கும் எந்தவொரு முயற்சியையும் இந்தியா கூட்டணி எதிர்க்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் பல்வேறு மாநில பேரவைத் த... மேலும் பார்க்க