கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை
காஞ்சிபுரம் வரதராஜா், ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணிகள்: அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.மணிவாசன் வலியுறுத்தினாா்.
சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.22.50 கோடியிலும், ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் கோயில் திருப்பணிகள் ரூ.28 கோடியிலும் நடைபெற்று வருகின்றன.
இரு ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று தற்போது 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இவ்விரு கோயில் திருப்பணிகளையும், அறநிலையத்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் ஆய்வு செய்தாா்.
கோயில் பட்டாச்சாரியா்கள், சிவாச்சாரியா்கள், அதிகாரிகள், ஸ்தபதிகள் ஆகியோரிடமும் திருப்பணிகள் குறித்து விபரங்கள் கேட்டறிந்தாா். திருப்பணிகளை விரைந்து முடிக்குமாறு கோயில் அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், சாா் ஆட்சியா் ஆஷிக் அலி, அறநிலையத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையா் குமாரதுரை, உதவி ஆணையா் காா்த்திகேயன், வரதராஜா் கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி உடனிருந்தனா்.