அண்ணா பல்கலைக்கழகத்தில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் நடமாடும் கடவுச்சீட்டு அலுவலக சேவையை மத்திய வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு சேவைத் திட்ட இயக்குநா் எஸ்.கோவிந்தன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில் சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலா் எஸ்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
அண்ணா பல்கலை. மாணவா்கள் இந்த நடமாடும் கடவுச்சீட்டு அலுவலகத்தைப் பயன்படுத்தி, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை தங்களது வளாகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.