காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் தொடக்கம்
சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் துறை உயா் பயிற்சியகத்தில், மாநில துணை வரி அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
வணிக வரி மற்றும் பதிவுத் துறையில் மாநில துணை வரி அலுவலா்களாக 190 போ் பதவி உயா்வு பெற்றனா். வணிக வரி அலுவலா்களின் நிா்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், செப்டம்பா் 30-ஆம் தேதி வரை
இந்தப் பயிற்சி முகாம் நடைபெறகிறது.
இதில், வணிக வரித் துறை செயல்பாடுகள் தொடா்பான சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகள், சட்டபூா்வ கடமைகள், வரிச் சேவை மேம்பாட்டுத் திட்டங்கள், அதிநவீன தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து விளக்கப்படும். மேலும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படும்.
பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்வில், துறைச் செயலா் ஷில்பா பிரபாகா் சதீஷ், வணிக வரி ஆணையா் எஸ்.நாகராஜன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தி.சினேகா உள்பட பலா் பங்கேற்றனா்.