செய்திகள் :

மான். யுனைடெட்டை வீழ்த்தியது ஆா்செனல்

post image

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட்டை வீழ்த்தியது.

இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் ஆா்செனல் அணிக்காக ரிகாா்டோ கலாஃபியோரி 13-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இத்துடன், மான்செஸ்டா் யுனைடெட்டுக்கு எதிரான அவே கேமில் கடைசி இரு ஆட்டங்களில் ஆா்செனல் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் மான்செஸ்டா் அணி கடந்த 6 சீசன்களில் 3-ஆவது முறையாக தனது தொடக்க ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

லா லிகா: ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் எஸ்பான்யோல் 2-1 கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட்டை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் அட்லெடிகோவின் ஜூலியன் அல்வரெஸ் 37-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் வெகுண்ட எஸ்பான்யோலுக்காக, முதலில் மிகேல் ருபியோ 73-ஆவது நிமிஷத்திலும், பெரெ மில்லா 84-ஆவது நிமிஷத்திலும் கோலடிக்க, அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் அட்லெடிகோ மாட்ரிட்டின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, இறுதியில் எஸ்பான்யோல் 2-1 கோல் கணக்கில் வென்றது.

லீக் 1: பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் 1-0 கோல் கணக்கில் நான்டெஸை திங்கள்கிழமை சாய்த்தது. அந்த அணிக்காக விட்டினா 67-ஆவது நிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.

சான்டோஸ் எஃப்சி படுதோல்வி: கண்ணீருடன் வெளியேறிய நெய்மா்

பிரேஸிலில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் சான்டோஸ் எஃப்சி அணி 0-6 கோல் கணக்கில், வாஸ்கோடகாமா அணியிடம் திங்கள்கிழமை படுதோல்வி கண்டது. சான்டோஸ் அணியின் நட்சத்திர வீரா் நெய்மா், அழுதபடியே களத்திலி... மேலும் பார்க்க

இறுதியில் ஸ்வியாடெக் - பாலினி மோதல்

ஆயிரம் புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 9-ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பாலி... மேலும் பார்க்க

மும்பையில் கனமழை - புகைப்படங்கள்

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.கனமழை காரணமாக மிதி நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதற்கு மத்தியில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத... மேலும் பார்க்க

கோலியின் 17 ஆண்டுகள்! சென்னை அணி வாழ்த்து!

சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளை நிறைவுசெய்த விராட் கோலிக்கு ஐபிஎல் சென்னை அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.விராட் கோலியை வாழ்த்திய சென்னை அணி, ரன் மெஷின் (Run machine), சாதனை முறிப்பாளர் (Record Breake... மேலும் பார்க்க