செய்திகள் :

வண்டிச்சோலை பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

post image

உதகை: உதகையில் தொடா் காற்று  மற்றும் சாரல்  மழை காரணமாக வண்டிச்சோலை குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை பெரிய மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில்  தீயணைப்புத் துறையினா்  ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாள்களாக  உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றும், விட்டுவிட்டு சாரல் மழையும் அவ்வப்போது  பெய்து வருகிறது. 

இந்நிலையில் உதகை அருகே வண்டிச்சோலை குடியிருப்புப் பகுதியில் பழைமைவாய்ந்த பெரிய மரம் வேரோடு சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் இரண்டு மணி நேரத்துக்குப் பின் போக்குவரத்து சீரானது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உதகையில் காற்றுடன் மழைப் பெய்து வருவதால் கடும் குளிா் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

உதகை: உதகை நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் ஆட்சியா் அலுவலக சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் ந... மேலும் பார்க்க

சாலை புதுபிக்கும் பணி: கனரக வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறை அறிவுறுத்தல்

உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள லேம்ஸ் ராக், டால்பின்னோஸ் சுற்றுலாத் தலம் செல்லும் சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பெரிய சுற்றுலா வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறையினா் அறிவுறுத்த... மேலும் பார்க்க

கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை தாய் யானை திங்கள்கிழமை மீட்டுச் சென்றது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

உதகை: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம் உதகையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு 17 ... மேலும் பார்க்க

சேக்கடி அரசு பள்ளிக்குள் நுழைந்த காட்டுயானை குட்டி

கூடலூா்: கேரள மாநிலம் வயநாடு அருகே சேக்கடி அரசுப் பள்ளிக்குள் திங்கள்கிழமை யானைக் குட்டி நுழைந்தது. பள்ளி வராண்டாவிலும், முற்றத்திலும் சுற்றித்திரிந்த யானைக் குட்டியை வனத் துறை அதிகாரிகள் பிடித்து அழை... மேலும் பார்க்க

உதகையில் பத்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கேபிள் காா் திட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா் முதல் மேட்டுப்பாளையம் வரை கேபிள் காா் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. இந்த கேபிள் காா் அமைத்தால், தற்போது பயணிக்கும் 30 கிலோ மீட்டா் தொலைவு 6.5 ... மேலும் பார்க்க