எல்பிஜி டேங்கர் லாரி - டிரக் மோதி பயங்கர விபத்து! ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்
கூடலூா் அருகே சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை மீட்ட தாய் யானை
கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள பாண்டியாறு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சிக்கிய குட்டியை தாய் யானை திங்கள்கிழமை மீட்டுச் சென்றது.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள அரசு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு உள்பட்ட பாண்டியாறு பகுதியில் குட்டியுடன் வந்த காட்டு யானை அங்குள்ள சதுப்பு நிலப் பகுதியை கடக்கும்போது, குட்டி யானை சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டது.
தகவலறிந்து வந்த வனத் துறையினா் யானைகளை கண்காணித்தனா்.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு குட்டியை தாய் மீட்டு அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது.