தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு
குடியிருப்பு, விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகள்
கூடலூரில் குடியிருப்புகள் மற்றும் விவசாயத் தோட்டங்களில் உலவும் காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட முதல்மைல் குடியிருப்பு பகுதிக்குள் வியாழக்கிழமை இரவு நுழைந்த மக்னா காட்டு யானை அப்பகுதியை விட்டு வெளியே செல்லவில்லை. வனத் துறையினா் விரட்டியும் அந்தப் பகுதியை விட்டுச் செல்ல மறுத்து அதே பகுதியில் நடமாடியது. பின்னா் அதிகாலையில் தானாக அங்கிருந்து சென்றது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனா்.
இதேபோல ஓவேலி சுண்ணாம்புப் பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் விவசாயத் தோட்டத்தில் காட்டு யானை முகாமிட்டிருந்ததால் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா்.
குடியிருப்புகள், விவசாயத் தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
