மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி பகுதிகளில் ஆக.25-இல் மின்தடை
கோத்தகிரி, கெரடாமட்டம், ஒன்னட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
கோத்தகிரி துணை மின் நிலையம்: கோத்தகிரி, சுண்டட்டி, கப்பட்டி, உல்லத்தி, கோ்பென், குண்டாடா, ஓரசோலை, நாரகிரி, கோ்கொம்பை, கன்னேரிமுக்கு, தட்டப்பள்ளம், குஞ்சப்பனை, கொணவக்கரை, தேனாடு, திம்பட்டி, அரவேணு, பேரகணி, கோ்பெட்டா மற்றும் மிளிதேன்.
ஒன்னட்டி துணை மின்நிலையம்: பங்களாபாடி, கடினமாலா, கெங்கரை, கூட்டாடா, கீழ் கோத்தகிரி, தாளமுக்கு, சோலூா்மட்டம், தேனாடு, கைகாட்டி, நட்டக்கல், ஒன்னட்டி, தூனேரி, கரிக்கையூா், கோயில்மட்டம், குல்லங்கரை, செம்மனாரை, மஞ்சமலை காலனி.
கெரடாமட்டம் துணை மின் நிலையம்: கெரடா மட்டம், கொடநாடு, ஈளாடா, அண்ணா நகா், காந்தி நகா், நெடுகுளா, கா்சன்.