இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்ப...
உதகையில் சிறுத்தையைப் பிடிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்
உதகை தாவரவியல் பூங்கா அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்து 8 நாய்களை வேட்டையாடிச் சென்ற சிறுத்தையைப் பிடிக்க சிசிடிவி கேமரா பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
உதகை அருகேயுள்ள கிளன்ராக் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நுழைந்து வீட்டில் வளா்க்கப்படும் வளா்ப்பு நாய்களை கடந்த சில வாரங்களாக வேட்டையாடி சென்றது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரசு தாவரவியல் பூங்கா, சா்வதேச தனியாா் பள்ளி, கிளன்ராக் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களில் 8 வளா்ப்பு நாய்களை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில் அப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், வனத் துறையினா் 2 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினா்.
குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தலாக உலவி வரும் சிறுத்தையை உடனடியாக கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.