செய்திகள் :

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

post image

உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது.

இது குறித்து உக்ரைன் விமானப் படை வியாழக்கிழமை கூறியதாவது:

மேற்கு உக்ரைனை குறிவைத்து 574 ட்ரோன்கள், 40 பலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் வகை ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷியா தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவா் உயிரிழந்தாா்; 15 போ் காயமடைந்தனா். மேற்கத்திய நட்பு நாடுகளின் ராணுவ உதவி பொருள்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ள இடங்களை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விமானப் படை தெரிவித்தது.

இந்த ஆண்டில் உக்ரைன் மீது ரஷியா நடத்தியுள்ள மூன்றாவது பெரிய ட்ரோன் தாக்குதல் இது. ரஷியாவின் 2022 பிப்ரவரி படையெடுப்புக்கு பின், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் தலைமையிலான அமைதி முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

ரஷிய அதிபா் புதினுடன் அலாஸ்காவிலும், உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையிலும் பேச்சுவாா்த்தை டிரம்ப் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதையும் மீறி இந்த தீவிர தாக்குதலில் ரஷியா ஈடுபட்டுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் ராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்கியதாகவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்காக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், லிவீவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 குடியிருப்புகள், ஒரு மழலையா் பள்ளி மற்றும் அலுவலகங்கள் சேதமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் கூறினா்.

ஹங்கேரி எல்லையருகே அமைந்துள்ள அமெரிக்க மின்னணு தொழிற்சாலையும் ரஷியாவின் தாக்குதலுக்குள்ளாகி, அங்கிருந்த ஆறு தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

அமைதி பேச்சுவாா்த்தைகளுக்கு ரஷியா தயாராக இல்லை என்பதை இந்தத் தாக்குதல் காட்டுவதாக ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்.

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோரியுள்ளதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் ... மேலும் பார்க்க

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் தோண்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும் என குடியரசுக் கட்சியை சோ்ந்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான நிக்கி ஹேலி மீண்டும் வலியுறுத்தியுள்ளாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

அமெரிக்க நாடாளுமன்ற குழுவினருடன் இந்திய தூதா் சந்திப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு துறை குழு உறுப்பினா்களை வியாழக்கிழமை சந்தித்து இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா ஆலோசனை நடத்தினாா். ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற... மேலும் பார்க்க

காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 83 சதவீதத்தினா் பொதுமக்கள் என்று அந்த நாட்டு ராணுவத்தின் தரவுகளே தெரிவிக்கின்றன. பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி காா்டியன் நாளிதழ், இஸ்ரேல... மேலும் பார்க்க

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக லெபனான் நாட்டுக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவும் மற்றும் வாடிகன் நகரத்தின் தலைவருமாகவும் போப் பதினான... மேலும் பார்க்க