செய்திகள் :

போப் பதினான்காம் லியோவின் முதல் வெளிநாடு பயணம்! எங்கு தெரியுமா?

post image

போப் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாடு பயணமாக லெபனான் நாட்டுக்குச் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாகவும் மற்றும் வாடிகன் நகரத்தின் தலைவருமாகவும் போப் பதினான்காம் லியோ, கடந்த மே மாதம் முதல் பதவிவகித்து வருகின்றார். தனக்கு முன்பு பதவி வகித்த மறைந்த போப் பிரான்சிஸை போலவே இவரும், போர்நிறுத்தங்களையும், உலக அமைதியையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் பதினான்காம் லியோ தனது முதல் வெளிநாட்டு பயணமாக, லெபனான் நாட்டுக்குச் செல்வார், என அந்நாட்டைச் சேர்ந்த கார்தினல் பெச்சாரா பௌட்ரஸ் ராய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,

“போப் பதினான்காம் லியோ விரைவில் லெபனான் நாட்டுக்கு பயணம் மேற்கொள்வார். இருப்பினும், அந்தப் பயணம் எப்போது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், வரும் டிசம்பர் மாதத்திற்குள் அவர் எப்போது வேண்டுமானாலும் தனது பயணத்தைத் துவங்கலாம். இதுகுறித்து, வாடிகன் அரசுதான் தெரிவிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன” என அவர் கூறியுள்ளார்.

இறுதியாக, மறைந்த போப் பதினாறாம் பெனடிக்ட், கடந்த 2012 ஆம் ஆண்டின் செப்டம்பரில் தனது கடைசி வெளிநாடு பயணமாக லெபனான் நாட்டுக்குச் சென்றார். அவருக்கு பிறகு பதவிக்கு வந்த மறைந்த போப் பிரான்சிஸ் அந்நாட்டுக்குச் செல்ல தொடர்ந்து முயற்சித்து வந்தபோதிலும், அங்கு நிலவும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழ்நிலைகளால் அது நிறைவேறாமல் போனது.

இதையடுத்து, காஸா மீதான இஸ்ரேலின் போர் உள்பட மத்திய கிழக்கில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மத்தியஸ்தம் செய்ய தயார் என போப் பதினான்காம் லியோ அறிவித்திருந்தார்.

இத்துடன், அவரது லெபனான் பயணம் குறித்து வாடிகன் நகரத்தின் செய்தித்தொடர்பாளர் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனவே, போப் பதினான்காம் லியோவின் பயணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை, அவ்வாறு அவர் லெபனான் நாட்டுக்குச் சென்றால், நீண்டகாலமாக அந்நாட்டின் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: செம்மணி புதைகுழியில்...! குழந்தைகளின் உடைகள், பாட்டில், 141 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

It has been reported that Pope Leo XIV will be traveling to Lebanon for his first foreign trip.

செம்மணி புதைக்குழியில்...! குழந்தைகளின் உடைகள், பாட்டில், 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

இலங்கை நாட்டில் உள்ள செம்மணி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைக்குழியில் இருந்து குழந்தைகளின் பால் பாட்டில் உள்ளிட்ட பொருள்களும், 141 மனித எலும்புக்கூடுகளும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் அரசுப... மேலும் பார்க்க

மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!

மே-9 கலவரம் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு மே 9 ஆம் தேதியன்று, ஊழல்... மேலும் பார்க்க

கனிவான குணத்தால் மக்களை ஈர்த்த நீதிபதி காலமானார்!

உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி ஃபிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்.அமெரிக்காவைச் சேர்ந்த மாநகராட்சி நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (வயது 88). அந்நாட்டின், காட் இன் பி... மேலும் பார்க்க

எஃப்பிஐ தேடி வந்த முக்கிய பெண் குற்றவாளி இந்தியாவில் கைது!

அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ அமைப்பினால் தேடப்பட்டு வரும் மிக முக்கிய 10 குற்றவாளிகளில் 4வது இடத்தில் இருக்கும் பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.பத்து முக்கிய குற்றவாளிகளில், தன்ன... மேலும் பார்க்க

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.50 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த அலாஸ்கா வந்த புதின், தன்னுடைய விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப ரூ.2.50 கோடியை அமெரிக்க டாலர்களில் செலுத்த வேண்டிய... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷியா அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ரஷியாவின் துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா இதுபற்றி கூறு... மேலும் பார்க்க