அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி....
ரோல்பால் போட்டியில் சாம்பியன்: திண்டுக்கல் அணிக்கு பாராட்டு விழா
நிலக்கோட்டை: திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல்பால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல் அணியினருக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் அருகேயுள்ள அனுகிரகா பள்ளியில் கடந்த 15 முதல் 17-ஆம் தேதி வரை 9, 14- வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான ரோல்பால் போட்டிகள் நடைபெற்றன.
இதில், தமிழகம் முழுவதிலிருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் 9-வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஆண்கள், பெண்கள் அணி என இரண்டு பிரிவிலும் திண்டுக்கல் மாவட்ட அணி முதலிடம் பிடித்தன.
14-வயதுக்குள்பட்டோா் பிரிவில் ஆண்கள் அணி முதலிடமும், பெண்கள் அணி இரண்டாமிடமும் பிடித்தன.
இந்த நிலையில், வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்ட அணி மாணவ, மாணவிகளுக்கு சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ரோல்பால் சங்க துணைத் தலைவரும், சா்வதேச நடுவருமான பிரேம்நாத், தென்னிந்திய ரோல்பால் சங்கச் செயலா் எம்.பி.சுப்பிரமணியம், பயிற்சியாளா்கள் தங்கலட்சுமி ஆகியோா் கலந்த கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பாராட்டி, பரிசுகள் வழங்கினா்.
நிகழ்ச்சியில் பயிற்சியாளா்கள் சக்திவேல், கலையரசன், கல்யாண், ராஜதுரை, மாணவா்களின் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.