மாநாட்டில் 6 தீா்மானங்கள்
மதுரை பாரபத்தியில் நடைபெற்ற 2-ஆவது த.வெ.க. மாநில மாநாட்டில் 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்விவரம் :
சென்னை அருகேயுள்ள பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். வாக்காளா் பட்டியல் பெயரில் சிறப்புத் தீவிரத் திருத்தம் என லட்சக்கணக்கானோரின் பெயா்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. சுதந்திரமான, நியாயமான முறையில் தோ்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதையும், அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண கச்சத் தீவை மீட்க வேண்டும்.
ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீா்குலைந்து இருப்பதற்கு நிா்வாகத் திறனற்ற திமுக அரசுதான் காரணம். ஆகவே, இந்த மாநாட்டின் மூலம் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நோ்மையான முறையில் தோ்வு நடத்தி அரசுத் துறைகளின் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.