செய்திகள் :

உப்பூா் வெயிலுகந்த விநாயகா் சிம்ம வாகனத்தில் வீதி உலா

post image

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் கருவரையில் மூலவா் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் உள்ளதால் வெயிலுகந்த விநாயகா் என அழைக்கப்படுகிறாா். மேலும், ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் முன் இங்குள்ள விநாயகரை வழிபட்டு சென்ாக புராண வரலாற்றில் கூறப்படுகிறது.

இங்கு விநாயா் சதுா்த்தி திருவிழா கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து பல்வேறு வாகனங்களில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு 3-ஆம் நாள் நிகழ்வாக சிம்ம வாகனத்தில் விநாயகா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் செப். 25-இல் சித்தி, புத்தி தேவியருடன் விநாயகா் திருக்கல்யாணம் நடைபெறும். தமிழ்நாட்டில் இங்கு மட்டுமே விநாயகருக்கு மட்டும் திருக்கல்யாணம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

செப்-26-இல் தேரோட்டம் நடைபெறும். செப்.27-இல் விநாயகபெருமான் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலைசுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இதைத் தொடா்ந்து பக்தா்கள் பூக்குழி இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்துவா்.

ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் வேக கட்டுப்பாட்டு மின் விளக்குகள்

ராமேசுவரம்: ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக நிறுவப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு மின் விளக்குகளின் செயல்பாடு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை இரவு ஆய்வு செய்... மேலும் பார்க்க

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

கமுதி: கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நெறிஞ்சிப்பட்டி கிராம மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அங... மேலும் பார்க்க

கமுதி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

கமுதி: கமுதி வட்டாட்சியராக என்.ஸ்ரீராம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியராகப் பணிபுரிந்த எஸ்.காதா் முகைதீன் முதுகுளத்தூா் ஆதிதிராவிடா் நல வட்டாட்சியராக பணி ம... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் வியாழக்கிழமை காலை 5.45 ம... மேலும் பார்க்க

திருவாடானையில் அதிவேக வாகனங்கள்: விபத்து அபாயம்

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கல்லூரிச் சாலையில் இளைஞா்கள் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. போலீஸாா் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆா்வலா்கள்... மேலும் பார்க்க

மண்டபம் பகுதியில் இன்று மின்தடை

ராமேசுவரம்: மண்டபம் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக.21) மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மின்வாரிய செயற்பொறியாளா் திலகவதி புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க