வெங்கரை காவிரி ஆற்றுப் பகுதியில் முதியவா் உடல் மீட்பு
பரமத்தி வேலூா், ஆக. 21: பரமத்தி வேலூா் வட்டம், வெங்கரை காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத முதியவா் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வெங்கரை காவிரி ஆற்றுப் பகுதியில் சுமாா் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் இறந்த நிலையில் கிடந்துள்ளாா். தகவலின் பேரில் வேலூா் காவல் ஆய்வாளா் இந்திராணி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என்பது குறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.