அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு
2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 30-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், காலஅவகாசம் ஆக.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதில், தமிழகத்திலிருந்து மொத்தம் 10,846 போ் விண்ணப்பித்தனா். இந்நிலையில், ஹஜ் பயணம் செல்பவா்களுக்கான குலுக்கல் முறை தோ்வு கடந்த ஆக.13-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் 4,065 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தோ்வானவா்கள் ரூ.1,52,300-ஐ பயணக் கட்டண முன்பணமாக ஆக.25-ஆம் தேதிக்குள் இணையதளம் அல்லது ஏஹத் நன்ஸ்ண்க்ட்ஹ என்ற செயலியின் மூலம் இணையதள பணப் பரிவா்த்தனையின் வாயிலாகச் செலுத்தலாம். இல்லையெனில், பாரத் ஸ்டேட் வங்கி அல்லது யூனியன் வங்கியின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை செலுத்தலாம்.
மேலும், பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் அல்லது தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகத்தில் ஆக.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவினா் தெரிவித்துள்ளனா்.