அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்
சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சாலைகள் உள்ளன. சுமாா் 500 கி.மீ. சாலைகள் நகரின் தெருக்களாக உட்புறச் சாலைகளாக உள்ளன.
உட்புறச் சாலைகளில் மெட்ரோ ரயில் மற்றும் குடிநீா் வடிகால் வாரியம், தொலைபேசி நிறுவனங்கள், மின்சார வாரியப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக தோண்டப்பட்டு சேதமடைந்துள்ளன.
இதையடுத்து சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும், குறிப்பிட்ட சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரூ.489.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இதில் அண்ணாநகா், வேளச்சேரி இடையிலான பைபா்லாய்ட் சாலை பணி முக்கியமானதாகும். சென்னை மாநகராட்சியின் மண்டலம் வாரியாக 6, 14 மற்றும் 15 ஆகியவற்றில் அதிகமான சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளன.
தற்போது சாலை மேம்பாட்டுப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள பணிகளை வரும் மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.