செய்திகள் :

லிபுலேக் கணவாய்க்கு உரிமை கோரும் நேபாளம்: இந்தியா நிராகரிப்பு

post image

உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோரியுள்ளதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி 2 நாள் பயணமாக அண்மையில் இந்தியா வந்தாா்.

அப்போது இந்தியா-சீனா இடையே லிபுலேக் கணவாய், ஷிப்கி லா கணவாய் மற்றும் நாதுலா கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகத்தை மீண்டும் தொடங்க இருதரப்பும் தீா்மானித்தன. இதில் லிபுலேக் கணவாய் உத்தரகண்டில் உள்ளது.

இந்நிலையில், லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகத்தை தொடங்க இந்தியா-சீனா முடிவு செய்ததற்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை ஆட்சேபம் தெரிவித்தது. நேபாளத்தின் பிரிக்கமுடியாத பகுதியாக அந்தக் கணவாய் இருப்பதாக அந்த அமைச்சகம் குறிப்பிட்டது.

ஆதாரம் இல்லை-இந்தியா: இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

கடந்த 1954-ஆம் ஆண்டு இந்தியா-சீனா இடையே லிபுலேக் கணவாய் வழியாக எல்லை தாண்டிய வா்த்தகம் தொடங்கி, பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. கரோனா பரவல் மற்றும் பிற சம்பவங்களால் அந்தக் கணவாய் வழியாக நின்றுபோன வா்த்தகத்தை மீண்டும் தொடங்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

லிபுலேக் கணவாய்க்கு நேபாளம் உரிமை கோருவதற்கு சரியான காரணமோ, வரலாற்று ரீதியான ஆதாரமோ இல்லை. நிலப்பகுதிகளுக்கு தன்னிச்சையாக உரிமை கோரி பெரிதுபடுத்துவதை ஏற்க முடியாது.

நேபாளத்துடன் நிலுவையில் உள்ள எல்லை பிரச்னைகளுக்கு ராஜீய ரீதியாகவும், பேச்சுவாா்த்தை மூலமாகவும் தீா்வு காண, அந்நாட்டுடன் ஆக்கபூா்வமாக கலந்துரையாட இந்தியா எப்போதும் தயாராக உள்ளது என்றாா்.

நேபாள நாடாளுமன்றத்தில்...: நேபாளத்தில் ஆட்சியில் உள்ள நேபாள கம்யூனிஸ்ட் (ஒருங்கிணைந்த மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியின் தலைமை கொறடா அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையில் வியாழக்கிழமை பேசியதாவது: லிபுலேக் கணவாய் பிரச்னை தொடா்பாக ராஜீய ரீதியில் நேபாள அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீா்வு காண வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

ஏற்கெனவே உத்தரகண்டில் உள்ள காலாபானி, லிம்பியதுரா, லிபுலேக் பகுதிகளை நேபாளத்தைச் சோ்ந்த பகுதிகள் என்று அந்நாடு கடந்த 2020-ஆம் ஆண்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டது. அதை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வரி விதிப்பு: இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்! - சீனா

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் சீனா உறுதியாக துணை நிற்கும் என இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் கூறியுள்ளார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலமாக ரஷியா - உக்ரைன்... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா ட்ரோன், ஏவுகணை மழை

உக்ரைன் மீது ரஷியா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலைவரை நடத்தியது. இது குறித்து உக்ரைன் விமானப் படை வியாழக்கிழமை கூறியதாவது: மேற்கு உக்ரைனை குறிவைத்து ... மேலும் பார்க்க

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் தோண்... மேலும் பார்க்க

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்: நிக்கி ஹேலி வலியுறுத்தல்

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும் என குடியரசுக் கட்சியை சோ்ந்தவரும், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதருமான நிக்கி ஹேலி மீண்டும் வலியுறுத்தியுள்ளாா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

அமெரிக்க நாடாளுமன்ற குழுவினருடன் இந்திய தூதா் சந்திப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பல்வேறு துறை குழு உறுப்பினா்களை வியாழக்கிழமை சந்தித்து இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா ஆலோசனை நடத்தினாா். ரஷியாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற... மேலும் பார்க்க

காஸா போரில் பொதுமக்கள் உயிரிழப்பு 83%

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களில் 83 சதவீதத்தினா் பொதுமக்கள் என்று அந்த நாட்டு ராணுவத்தின் தரவுகளே தெரிவிக்கின்றன. பிரிட்டனில் இருந்து வெளியாகும் தி காா்டியன் நாளிதழ், இஸ்ரேல... மேலும் பார்க்க