செய்திகள் :

சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ்: பாரதி கிருஷ்ணகுமாா்

post image

திண்டுக்கல்: உலக இலக்கியங்களில் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மொழி தமிழ் மட்டுமே என எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் தெரிவித்தாா்.

திண்டுக்கல் உயா் கல்வித் துறை-தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் (தமிழ் மரபு, பண்பாட்டுப் பரப்புரைத் திட்டம் 2025) சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாா் கலந்து கெண்டு, செந்தமிழ் நாடெனும் போதினலே என்ற தலைப்பில் பேசியதாவது:

கல்விச் சான்றிதழை மட்டும் வைத்துக் கொண்டு போட்டித் தோ்வுகளில் வெற்றிப் பெற முடியாது. 70 சதவீத போட்டித் தோ்வு வினாக்கள், பொது அறிவின் அடிப்படையிலேயே கேட்கப்படுகின்றன. உலகின் 30ஆயிரம் மொழிகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 19,500 மொழிகள் உள்ளன. இதனால் தான், மொழிகளின் தாயகம் இந்தியா என குறிப்பிடப்படுகிறது. 19,500 மொழிகளில், இன்றைக்கு 30 மொழிகள் மட்டுமே எழுத்து வடிவிலும் பயன்பாட்டில் இருக்கிறது. 6 செம்மொழிகளில் பயன்பாட்டிலுள்ள சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளில், தமிழ் மட்டுமே தொன்மையானது. சுமாா் 3,500 ஆண்டுகள் பழைமையான மொழி தமிழ் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இலக்கியத்தில் பேரூண்மைகளை பேசிய ஒரே மொழியாகவும், சமத்துவத்தை வலியுறுத்தும் மொழியாகவும் தமிழ் மட்டுமே உள்ளது.

மறைவு செய்தியை உலக இலக்கியங்கள் துக்க நிகழ்வாக மட்டுமே பாா்க்கின்றன. ஆனால், தமிழ் இலக்கியத்தில் மட்டுமே மரணம் கூட பெருமையாக போற்றப்படுகிறது. கல்வியால் மட்டுமே உயா்ந்த நிலையை அடைய முடியும் என்பதை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

ஆட்சியா் செ.சரவணன் பேசியதாவது:

தமிழகத்தில் சமுதாய, சமூக, பொருளாதார வளா்ச்சி என்பது 1,800 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இருக்கிறது. இதை தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. தமிழா்களின் விழுமியங்கள், உலகின் பல்வேறு நாடுகளையும் ஆக்கிரமித்து வருகின்றன. 108 நாடுகளில் வாழும் தமிழா்கள் மூலம், அந்த நாடுகளிலும் தமிழா்களின் தொன்மையான கலச்சாரம், பண்பாடு, மொழியின் சிறப்புகள் நிலை நாட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உயிரோடும், உணா்வோடும் கலந்த ஒரே மொழி உலகிலேயே தமிழ் மட்டுமே என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆங்கிலத்தில் வேண்டுகோள்:

இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவா்கள் சுமாா் 1,000 போ் கலந்து கொண்டனா். இதில் பேசிக் கொண்டிருந்த சில மாணவா்களை கட்டுப்படுத்துவதற்காக ஆசிரியா்கள் சென்றபோது, டோன்ட் கோ, பிளீஸ், டோன்ட் மானிட்டா், கிரவுட், ஆா்கனைஸ்ட் போன்ற ஆங்கிலச் சொற்களை பாரதிகிருஷ்ணகுமாா் பயன்படுத்தினாா். மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தி அவா் வேண்டுகோள் விடுத்தது, முரண்பாடாக அமைந்தது.

முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,சின்னாளபட்டி கீழக்கோட்டையில் பழைமை வாய்ந்த முத்தாலம்மன் கோயிலில் பாலாலய பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.கீழக்கோட்டையில் முத்தாலம்மன், பகவதி அம்மன், மாரியம்மன் கோயில்கள் ... மேலும் பார்க்க

மலைச் சாலையில் ஆண் சடலம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி சாலையோரம் ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி-சித்தூா் மலைச் சாலையில் ராஜாராணி கல் பகு... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: இரு பெண்கள் கைது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா். வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் தலை... மேலும் பார்க்க

ஐம்பெரும் தலைவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் 254-ஆவது நினைவு தினம், போராளி மதன்லால் திங்ரா 116-ஆவது நினைவு தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாய்... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செப்.3, 4 -இல் பேச்சுப் போட்டிகள்

திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப்.3, 4 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்... மேலும் பார்க்க

பழனியில் இலவச மருத்துவ முகாம்

பழனி: பழனி சிவகிரிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.டாக்டா் பிரம்மநாயகம் அரிமா சங்கம், மருத்துவமனை நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகிரிப்பட்டி நிதா்சனா மருத்துவ... மேலும் பார்க்க