மாவட்ட ஹாக்கிப் போட்டி: கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட ஹாக்கிப் போட்டியில் கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு முன்னேறி உள்ளன.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சாா்பில், தூத்துக்குடி மாவட்ட அளவில் மாணவிகளுக்கான ஹாக்கிப் போட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
14 வயதுக்கு உள்பட்ட பிரிவில், கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அணியும் தூத்துக்குடி ஏபிசி வீரபாகு அணியும் மோதியதில் 3-0 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
17 வயது பிரிவில், கோவில்பட்டி இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி அணியும் தூத்துக்குடி தாஸ் நேவிஸ் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியதில் 1-0 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது.
19 வயது பிரிவில், கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி அணியும் தூத்துக்குடி தஸ் நேவிஸ் மேல்நிலைப்பள்ளி அணியும் மோதியதில் 1-0 என்ற கோல்கணக்கில் கோவில்பட்டி அணி வெற்றி பெற்றது.
நிகழ்ச்சியில், வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் கண்ணதாசன் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா்.
வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியா் ஜெய்சங்கா், ஆசிரியா் ராஜா சுந்தா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் ஆனந்த பிரபாகரன் செய்திருந்தாா்.