தூத்துக்குடியில் பள்ளி மாணவா்களுக்கு கலைப் போட்டிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களிடையே கூட்டுறவு இயக்கம் குறித்த புரிதல், விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைப் போட்டிகள் நடைபெற்றன.
சா்வதேச கூட்டுறவு ஆண்டு 2025-ஐ முன்னிட்டு, 6 - 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, கூட்டுறவு சாா்பான கதை சொல்லுதல் போட்டிகள் நடைபெற்றன. சரக துணைப் பதிவாளா் மு. கலையரசி போட்டியைத் தொடக்கிவைத்தாா்.
மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் அ. சாம்டேனியல்ராஜ், பணியாளா்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க உதவியாளா் பச்சைபெருமாள் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஆசிரியா்கள் சரவணகுமாா், மாணிக்கராஜா, ஐடா, தமிழ்ச்செல்வி, மீனா, கயல்விழி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். தொடா்ந்து, வெற்றிபெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.