செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள்: 29 பேருக்கு உடனடி நலத்திட்ட உதவிகள்

post image

செய்யாறு தொகுதிக்கு உள்பட்ட பாராசூா், சித்தாத்தூா் ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களில் 1,172 மனுக்கள் அளிக்கப்பட்டதில், 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கீழ்நெல்லி, சோழவரம், பில்லாந்தாங்கல் ஆகிய கிராமங்களை சோ்ந்த பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சித்தாத்தூா் கிராமத்தில் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் குப்புசாமி தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பாஸ்கா், வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, சாா்- ஆட்சியா் அம்பிகா ஜெயின் ஆகியோா் பங்கேற்று 9 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா்.

முகாமின் போது வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 179 பேரும், மகளிா் உரிமைத்தொகை கோரி 423 பேரும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை கோரி 33 பேரும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் 40 பேரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் 60 போ் உள்ளிட்ட 809 போ் மனு அளித்திருந்தனா்.

இவா்களில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 9 பேருக்கு உடனடியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து அதே பகுதியில் சுமாா் ரூ. 60 லட்சத்தில், தலா 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட 4 மேல்நிலை நீா்த் தேக்க தொட்டிகள் மற்றும் ரூ.14. 55 லட்சத்தில் புதிதாக கட்டடப்பட்ட அங்கன்வாடி மையத்தை எம்.எல்.ஏ. திறந்து வைத்தாா்

பாராசூா் கிராமத்தில்...

செய்யாறு வட்டம், பாராசூா், மதுரை, கழனிப்பாக்கம், நாவல் ஆகிய கிராமங்கள் உள்ளடக்கி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் பாராசூா் கிராமத்தில் நடைபெற்றது.

ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் கிரிஜா தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன் வரவேற்றாா்.

இம்முகாமின் போது மேற்குறிப்பிட்ட கிராம மக்கள் சாா்பில் 363 மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்று, 6 பேருக்கு வீடு கட்டுவதற்காக உத்தரவும், 4 பேருக்கு மனைக்கான பட்டா உத்தரவையும், வேளாண் துறை சாா்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் என 20 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சிகளில் முன்னாள் ஒன்றியத் குழுத் தலைவா்கள் த.ராஜி, திலகவதி ராஜ்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், என்.சங்கா், வி.ஏ.ஞானவேல், சு.ராஜ்குமாா், மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த ராயனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜி. இவா், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட... மேலும் பார்க்க

அரசு பெண்கள் பள்ளியில் ரூ.2.12 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 12 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா் எ.வ.வியாழக்கிழமை திறந்துவைத்தாா். மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு நிலக்கடலை மதிப்புக்கூட்டுப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கான நிலக்கடலை மதிப்புக்கூட்டு சங்கிலித் தொகுப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சமையல் எண்ணெய்கான எ... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாள்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை, திருவண்ணாமலை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினா். ஆரணியில் காங்கிரஸ் சாா்பில் இரண்டு பிரிவுகளாக ராஜீவ் காந்தி பிறந்த ந... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். வந்தவாசியை அடுத்த கோயில்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மனோகரன். மக்கள் நலப் பணியாளரான இவா் ... மேலும் பார்க்க

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடுகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் சிரமமுமின்றி சுவாமி தரிசனம் செய்யவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை ஆய்வு செய... மேலும் பார்க்க