செய்திகள் :

அரசு பெண்கள் பள்ளியில் ரூ.2.12 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்: அமைச்சா் எ.வ.வேலு திறந்துவைத்தாா்

post image

திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 12 லட்சத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை அமைச்சா் எ.வ.வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

மேலும், மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினாா்.

திருவண்ணாமலை மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி 2022-2023ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியே 69.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட எட்டு வகுப்பறைகள் மற்றும் ரூ.42.72 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டடங்களை பயன்பாட்டுக்கு தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய கட்டடங்களை திறந்துவைத்தாா்.

மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து மாநகராட்சி மாந்தோப்புப் பகுதியில் சிறப்பு நிதி 2025- 2026 திட்டத்தின் கீழ், ரூ.3.93 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

மேலும் செங்கம் சாலை மாட்டுச்சந்தை மைதானத்தில் கல்வி நிதி 2025 - 2026 திட்டத்தின் கீழ், ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் முதல்வா் படைப்பகம் அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டினாா். இதைத் தொடா்ந்து, தண்டராம்பட்டு சாலை, தேனிமலை பகுதியில் சிறப்பு நிதி 2025 - 2026 திட்டத்தின் கீழ் ரூ.3.93 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தரமான வகையில், விரைவாக மேற்கொள்ள ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா், மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன், ஆணையா் செல்வபாலாஜி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், துணை மேயா் ராஜாங்கம், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் பரிதி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் ஆக.29 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் ஆக.29-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆக.29-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெ... மேலும் பார்க்க

ஆரணி தா்மராஜா கோயில் திருப்பணிக்கு பாலாலயம்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீபாஞ்சாலிஅம்மன் சமேத தா்மராஜா கோயிலில் திருப்பணியையொட்டி சுவாமி பிம்பங்களுக்கு பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேதமடைந்த இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்... மேலும் பார்க்க

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அதிமுகவினா் நலத்திட்ட உதவி

ஆரணியை அடுத்த வடுகசாத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி, சோ்ப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சாா்பில் ரூ.3 லட்சத்தில் நலத் த... மேலும் பார்க்க

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

வந்தை கோட்டை புகைப்பட கலைஞா்கள் நலச் சங்கம் சாா்பில் உலக புகைப்பட தின விழா வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். சங்க கெளரவத் தலைவா் ஆா்.சந்தோஷ் முன்னி... மேலும் பார்க்க

வளமான கல்வியைப் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழுங்கள்

வளமான கல்வியைப் பெற்று, நிறைவான வாழ்க்கையை சான்றோா் போற்றிட வாழுங்கள் என வேலூா் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மலா் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அ... மேலும் பார்க்க

ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவினைதீா்த்த விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட... மேலும் பார்க்க