செய்திகள் :

மும்பை: சொகுசு ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

மும்பையில் சொகுசு ஹோட்டலுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகாராஷ்டிர மாநிலம், வோர்லியில் உள்ள சொகுசு ஹோட்டலுக்கு ஆங்கிலத்தில் மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் ஒன்று புதன்கிழமை இரவு வந்தது. அதில், 3 அறைகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

அதோடு தமிழ்நாட்டில் ஒரு காவல் சங்கம் அமைக்க வேண்டும் என்ற வினோதமான கோரிக்கையையும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹோட்டலில் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்புப் படையினர் உடனே முழுமையான சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஹோட்டலுக்குள் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

எனவே, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

மின்னஞ்சலின் ஐபி முகவரியைக் கண்காணிக்க போலீஸார் முயற்சித்து வருகின்றன. நகரத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு சமீபத்தில் மிரட்டல் விடுத்து மின்னஞ்சல்கள் வந்தன.

இந்த மின்னஞ்சல்களில் சில அனுப்புநரின் அடையாளம் மற்றும் இருப்பிடத்தை மறைக்க மெய்நிகர் தனியார் நெட்வொர்க்குகள் மூலம் அனுப்பப்பட்டதாக அதிகாரி கூறினார். மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

A luxury hotel in Worli in Central Mumbai received an email threatening bomb blasts but it turned out to be a hoax, police said on Thursday.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

ஜம்மு ரயில் நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதத்துடன் வந்த புறாவை பாதுகாப்புப் படையினர் பிடித்துள்ளனர்.ஜம்மு-காமீரின் சர்வதேச எல்லையில் உள்ள காட்மரியா பகுதியில் ஆகஸ்ட் 18 அன்று... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

உத்தரகண்டில் பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவனால் பரபரப்பு நிலவியது. உத்தரகண்ட் மாநிலம், உதம் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கங்கன்தீப் சிங் கோலி இயற்பியல் ஆசிரியரா... மேலும் பார்க்க

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.... மேலும் பார்க்க

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

தெலங்கானாவில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 2 மூத்த தலைவர்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தெலங்கானாவில், இயங்கி வந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் தண்... மேலும் பார்க்க

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஷ்ரேயாஸ் தந்தை வேதனை

இந்திய டி20 அணியில் இடம்பெறாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வ... மேலும் பார்க்க

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு நடவடிக்கை: நிதிஷ்குமார்

கணவரால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பிகார் மாநில மதரஸா கல்வி வாரியத்தின் நூற்றாண்டு வி... மேலும் பார்க்க