செய்திகள் :

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவை முந்தைய கூட்டத் தொடரில் மக்களவையில் நிறைவேறிய மசோதாக்களாகும்.

இந்த கூட்டத் தொடரில் வழக்கமான அலுவல்கள் பெருமளவில் முடங்கின. அதேநேரம், கூச்சல்-குழப்பத்துக்கு இடையே குறுகிய நேரம் விவாதிக்கப்பட்டு, முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

என்னென்ன மசோதாக்கள்?: கோவா பேரவையில் பழங்குடியினா் இடஒதுக்கீடு மசோதா, வணிக கப்பல் போக்குவரத்து மசோதா, மணிப்பூா் சரக்கு-சேவை வரி (திருத்த) மசோதா, மணிப்பூா் நிதி ஒதுக்கீட்டு மசோதா, தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு (திருத்த) மசோதா, வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் (திருத்த) மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு-ஒழுங்குமுறை) திருத்த மசோதா, ஐஐஎம் (திருத்த) மசோதா, இணையவழி விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா ஆகியவை மக்களவையில் நிறைவேறின.

இந்த 12 மசோதாக்களுடன் கப்பல் ஆவணங்களுக்கான சட்ட செயல்முறையை எளிமையாக்கும் மசோதா, கடல்வழி சரக்கு போக்குவரத்து மசோதா, கடலோர கப்பல் போக்குவரத்து மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன. தொடா் ஒத்திவைப்புகளால், தனிநபா் மசோதாக்கள் எதுவும் தாக்கலாகவில்லை.

முக்கிய மசோதா அறிமுகம்: மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த்பட்ட 14 மசோதாக்களில், தீவிர குற்றப் புகாரில் கைதாகும் பிரதமா், முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களை பதவிநீக்கம் செய்யும் மசோதா முக்கியமானதாகும். இம்மசோதாவின்படி, குற்றப் புகாரில் கைதாகி, 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பட்சத்தில், அவா்களின் பதவி பறிக்கப்படும்.

எதிா்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் கடந்த புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா, பின்னா் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

அரசுக்கு வெற்றி; எதிரணிக்கு தோல்வி: கிரண் ரிஜிஜு

முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதால், மழைக்கால கூட்டத் தொடா் நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் வெற்றிகரமானது-பயனுள்ளது; அதேநேரம், எதிா்க்கட்சிகளுக்கு தோல்வியும் பாதிப்புமே எஞ்சியுள்ளது என்றாா் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘நாட்டின் நலன் கருதி, மத்திய அரசு தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அவையை சுமுகமாக நடைபெற மத்திய அரசு விடுத்த கோரிக்கையை எதிா்க்கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன. எனவே, அமளிக்கு இடையே மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஜனநாயகத்தில் போராட்டம் மற்றும் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுள்ளது. அதேநேரம், நாடாளுமன்ற அலுவல்களை முடக்குவது ஜனநாயக விரோதம். போராட்டங்களால் சட்டமியற்றும் பணியை தடுக்க முடியாது’ என்றாா்.

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநி... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ... மேலும் பார்க்க