மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
பழங்குடியினா் கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை
உதகை, ஆக. 21: குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குரும்பாடி பழங்குடியினா் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நுழைந்த ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
சமவெளி பகுதியான மேட்டுப்பாளையம், சிறுமுகை, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் வனப் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. மேலும் குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோர வனத்தில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது. இதனால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீா் தேடி மலைப் பாதையில் நடமாடி வருகின்றன.
இந்நிலையில், குன்னூா் -மேட்டுப்பாளையம் சாலை குரும்பாடி பகுதியில் உள்ள பழங்குடியினா் குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை வியாழக்கிழமை புகுந்தது.
இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரத்துக்கு பிறகு அந்த காட்டு யானை அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து பழங்குடியின மக்கள் நிம்மதி அடைந்தனா்.