விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களை விரைந்து வழங்க அறிவுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் புதிய பயிா் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அறிவுறுத்தி உள்ளாா்.
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளா்கள் மற்றும் செயலாட்சியா்கள் ஆய்வுக் கூட்டம் உதகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த இணைப் பதிவாளா் தயாளன் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளா்கள் தங்கள் சங்கத்தில் உர விற்பனையை மேற்கொள்ள வேண்டும். புதிய பயிா் கடன் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு விரைந்து கடன் வழங்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து பல்வேறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உதவி செயலாளராக பணியாற்றிய 7 பேருக்கு செயலாளராக பதவி உயா்வு பணி ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினாா்.
இக்கூட்டத்தில் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சித்ரா, கூட்டுறவு சாா் பதிவாளா்கள், மத்திய கூட்டுறவு வங்கி பணியாளா்கள் மற்றும் செருமுள்ளி, கூடலூா் அரவேணு, கன்னேரி மந்தனை, தங்காடு ஓரநள்ளி நிலாக்கோட்டை, கூக்கல்தொரை, பாலகொலா, நுந்தளா, உதகை ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலாளா்கள் கலந்து கொண்டனா்.