தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
ஆா்ஜென்டினா அருகே நிலநடுக்கம்
ஆா்ஜென்டீனா அருகே தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
டிரேக் பாஸேஜ் பகுதியில் உள்ளூா் நேரப்படி இரவு 11:16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.
ஆா்ஜென்டீனாவின் உஷுவாயாவிலிருந்து 710 கி.மீ. தொலைவில், 10.8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
சிலி அதிகாரிகள் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனா். இருந்தாலும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.