செய்திகள் :

Sachin: ``ஊட்டச்சத்தும் இயக்கமும் முக்கியம்'' - உடற்பயிற்சி நிலையம் தொடங்கிய மகளை வாழ்த்திய சச்சின்

post image

பிரபல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் புதிதாக உடற்பயிற்சி நிலையம் தொடங்கியுள்ளார்.

துபாய்யை மையமாகக் கொண்ட பைலேட்ஸ் அகாடமியின் கிளையை மும்பையில் அந்தேரி பகுதியில் தொடங்கியுள்ளார் சாரா.

Sara Tendulkar பின்னணி

சாரா ஒரு பதிவு செய்யப்பட்ட ஊட்டசத்து நிபுணர். மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறையியல் பயின்றுள்ளார். பைலேட்ஸ் என்பது மனம் மற்றும் உடலை ஒருங்கிணைக்கும் உடற்பயிற்சி முறையாகும்.

Sara Tendulkar with Family

வாழ்த்திய சச்சின்

சாரா தன் விருப்பத்துக்கு ஏற்ற தொழிலை தொடங்கியுள்ளது குறித்து சமூக வலைத்தளத்தில் நெகிழ்ந்துள்ளார் சச்சின்.

அவரது பதிவில், "ஒரு பெற்றோராக உங்கள் குழந்தைகள் உண்மையாகவே விரும்பி செய்யும் ஒன்றை ஒருநாள் கண்டடைவார்கள் என நம்புவீர்கள். சாரா ஒரு பைலேட்ஸ் ஸ்டூடியோவைத் திறப்பது எங்கள் இதயத்தை நிரப்பும் தருணங்களில் ஒன்றாகும்.

இந்தப் பயணத்தை அவள் தன் கடின உழைப்பாலும் நம்பிக்கையாலும், செங்கல் செங்கலாக கட்டி எழுப்பியிருக்கிறாள்.

ஊட்டச்சத்தும் இயக்கமும் எப்போதும் நம் வாழ்வில் முக்கியமானவை, இந்த எண்ணத்தை அவளது சொந்த குரலில் முன்னெடுத்துச் செல்வதைப் பார்ப்பது சிறப்பானது.

சாரா, நாங்கள் இதைவிட பெருமையாக இருக்க முடியாது. உன்னுடைய இந்த பயணத்துக்கு வாழ்த்துகள்" என எழுதியிருக்கிறார்.

``சாப்பாட்டில் ஈ, பூச்சி, முடி இருக்கத்தான் செய்யும்'' -ஷாருக்கான் மனைவி நடத்தும் ஹோட்டலில் விளக்கம்

தூரி ரெஸ்டாரண்ட்பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஐ.பி.எல் கிரிக்கெட் அணியை சொந்தமாக நடத்தி வருகிறார். இது தவிர ரெட்சில்லீஸ் என்ற படத்தயாரிப்பு கம்பெனியையும் நடத்தி வருகிறார். ஷாருக்கான் மனைவி கெளரி கான், தூ... மேலும் பார்க்க

Frank Caprio: அமெரிக்காவின் கனிவான நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்; கடைசியாக சொன்ன செய்தி!

நீதிபதி பிராங்க் கேப்ரியோ சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அமெரிக்காவில் உள்ள ரோட் தீவைச் சேர்ந்த இவர் கனிவான விசாரணைக்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறார். 88 வயதான இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கண... மேலும் பார்க்க

சீனா: "கல்யாணப் பொண்ணு உன் தங்கச்சிப்பா" - ட்விஸ்ட் கொடுத்த தாய்; ஆனாலும் திருமணம் நடந்தது எப்படி?

சீனாவின் சுஜோ என்ற இடத்தில் நடைபெறவிருந்த திருமணம், உணர்ச்சிவசமான குடும்ப மறு-ஒன்றிணைவாக மாறியிருக்கிறது.சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தளம் கூறியிருப்பதன்படி, 2021ம் ஆண்டு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மணம... மேலும் பார்க்க

`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென்ன?

இங்கிலாந்தில் வசிக்கும் எஞ்சினியர் ஒருவர் தனது மறைந்த தந்தையின் ஆசீர்வாதத்தால் ரூ.11 கோடி லாட்டரியில் வென்றதாக நம்புகிறார்.போல்டனில் வசிக்கும் 46 வயதான டாரன் மெக்குவைர் என்பவர் அவரது தந்தையின் பிறந்த ... மேலும் பார்க்க

இந்திய இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்த பிரபல டிரக் ஓட்டுநர் - யார் இந்த ராஜேஷ்?

இந்தியாவில் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், பலர் முழுநேர தொழிலாக அதில் பணம் சம்பாதித்து வருகின்றனர். பலரும் தங்களின் அன்றாட வேலைகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து அதன் மூலம் சம்பாதித்தும் பிரபலமாகியும் வர... மேலும் பார்க்க

Rolls-Royce: தலைப்பாகை நிறத்துக்கு ஏற்ப ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்; வைராலான ரூபன் சிங் யார்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபர் ரூபன் சிங் என்பவர், 15 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்பட பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார். குறிப்பாக அவரின் தலைபாகை வண்ணத்திலேயே ரோல்ஸ்-ராய்ஸ் கார் இருக்கும் ... மேலும் பார்க்க