செய்திகள் :

`தந்தை ஆசீர்வாதம் தான் காரணம்' - லாட்டரியில் ரூ.11 கோடி வென்ற பொறியாளர் சொல்வதென்ன?

post image

இங்கிலாந்தில் வசிக்கும் எஞ்சினியர் ஒருவர் தனது மறைந்த தந்தையின் ஆசீர்வாதத்தால் ரூ.11 கோடி லாட்டரியில் வென்றதாக நம்புகிறார்.

போல்டனில் வசிக்கும் 46 வயதான டாரன் மெக்குவைர் என்பவர் அவரது தந்தையின் பிறந்த நாள் மற்றும் அவர் மறைந்த தினத்தை அடிப்படையாகக் கொண்ட எண்களை லாட்டரியில் தேர்வு செய்திருக்கிறார்.

அதுவே அவருக்கு 10 லட்சம் பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.11.77 கோடி) பரிசுத் தொகையை பெற்றுத் தந்துள்ளது.

Lottery
Lottery (representative)

இதுகுறித்து டாரன் கூறுகையில் “எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அப்பாவை என்றும் நினைவில் வைத்திருக்கிறோம். அதனால் அவரின் நினைவாகவே அந்த எண்களைப் போட்டேன்”.

லாட்டரி டிரா நடந்த நாளில், நான்கு ஆண்டுகளாக பூக்காத அவரது தோட்ட ரோஜா செடிகள் திடீரென சிவப்பாக மலர்ந்த சம்பவத்தையும் அவர் உணர்ச்சி பூர்வமாக பகிர்ந்துள்ளார்.

“அது அப்பா தரும் சிக்னல்தான் என நினைத்தேன். அந்த நாளே லாட்டரியும் எனக்கே வந்து சேர்ந்தது. இது நம்ப முடியாத அதிசயம்” என அவர் கூறியிருக்கிறார்.

இருபது ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வரும் தனது துணை லாரா துவெயிட்ஸ் உடன், தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் டாரன். அதோடு குடும்பத்துடன் ஸ்பெயின் சென்று விடுமுறையை கழிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்திய இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்த பிரபல டிரக் ஓட்டுநர் - யார் இந்த ராஜேஷ்?

இந்தியாவில் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், பலர் முழுநேர தொழிலாக அதில் பணம் சம்பாதித்து வருகின்றனர். பலரும் தங்களின் அன்றாட வேலைகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து அதன் மூலம் சம்பாதித்தும் பிரபலமாகியும் வர... மேலும் பார்க்க

Rolls-Royce: தலைப்பாகை நிறத்துக்கு ஏற்ப ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்; வைராலான ரூபன் சிங் யார்?

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் தொழிலதிபர் ரூபன் சிங் என்பவர், 15 ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் உள்பட பல ஆடம்பர கார்களை வைத்துள்ளார். குறிப்பாக அவரின் தலைபாகை வண்ணத்திலேயே ரோல்ஸ்-ராய்ஸ் கார் இருக்கும் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது? - அமிதாப் பச்சன் நிகழ்ச்சியில் கர்னல் சோஃபியா குரேஷி சொல்வதென்ன?

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் கர்னல் சோஃபியா குரேஷி "ஆபரேஷன் சிந்தூர் ஏன் தேவைப்பட்டது" என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் கௌன்... மேலும் பார்க்க

சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் - தொழிலதிபர் மகள் சானியா சந்தோக் திருமணம் நிச்சயதார்த்தம்?

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் தனது தந்தையை போல, கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளார். 25 வயதாகும் அர்ஜூன் டெண்டுல்கர், சானியா சந்தோக் என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள... மேலும் பார்க்க

``சூப்பர் ஸ்டார் என்ற உச்ச நிலை அடைந்தாலும், அவர் எளிமையின் சிகரம்'' - ரஜினிகாந்த் குறித்து சசிகலா

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், சசிகலா தனது எக்ஸ் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதி... மேலும் பார்க்க

``காசா படுகொலைக்கு எதிராக போராட்டம்'' - CPI(M) அறிவிப்பு; மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருள்களை காசாவிற்குள் கொண்டு செல்லவும் இஸ்ரேல் தடை... மேலும் பார்க்க