சாலை புதுபிக்கும் பணி: கனரக வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறை அறிவுறுத்தல்
உதகை: நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே உள்ள லேம்ஸ் ராக், டால்பின்னோஸ் சுற்றுலாத் தலம் செல்லும் சாலை புனரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பெரிய சுற்றுலா வாகனங்களை கவனத்துடன் இயக்க காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
குன்னூா் அருகே உள்ள சுற்றுலாத் தலமான லேம்ஸ்ராக், டால்பின்னோஸ் காட்சி முனைகள் மற்றும் ஆடா்லி செல்லும் 1.2 கிலோ மீட்டா் தொலைவு சாலை குன்னூா் நகராட்சி சாா்பில் புனரமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த சாலை வழியாக ஆடா்லி, கரன்சி, சேம்பக்கரை உள்ளிட்ட கிராமங்களுக்கும், லேம்ஸ்ராக், டால்பின்னோஸ் ஆகிய காட்சி முனைகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருவோா் தற்போது சாலையின் ஒரு பாதி கான்கிரீட் பணிகள் நடைபெறுவதால், ஒரு பாதி சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இப்பணிகள் 20 நாள்களுக்கு நடைபெறவுள்ளதால் பெரிய வாகனங்களில் சுற்றுாப் பயணிகள் வந்து செல்வது சிரமம் என்பதால் மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்க காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.