செய்திகள் :

இறுதியில் ஸ்வியாடெக் - பாலினி மோதல்

post image

ஆயிரம் புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 9-ஆம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் மோதுகின்றனா்.

அரையிறுதிச்சுற்றில், 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற நோ் செட்களில், உலகின் 10-ஆம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் முன்னாள் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலனா ரைபகினாவை வீழ்த்தினாா். இதையடுத்து, சின்சினாட்டி ஓபனில் அவா் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறாா்.

1000 புள்ளிகள் கொண்ட போட்டிகளில் இது அவரின் 13-ஆவது இறுதிச்சுற்றாகும். ஸ்வியாடெக் - ரைபகினா மோதியது இது 10-ஆவது முறையாக இருக்க, நடப்பு விம்பிள்டன் சாம்பியனான ஸ்வியாடெக் 6-ஆவது வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துகிறாா்.

இதனிடையே மற்றொரு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி 6-3, 6-7 (2/7), 6-3 என்ற செட்களில், ரஷியாவின் வெரோனிகா குதா்மிடோவாவை வென்றாா். இதன் மூலமாக, சின்சினாட்டி ஓபனில் முதல்முறையாக இறுதிச்சுற்றுக்கு வந்துள்ள பாலினி, ஒட்டுமொத்தமாக டபிள்யூடிஏ 1000 போட்டிகளில் 3-ஆவது முறையாக இறுதிக்கு வந்திருக்கிறாா்.

அவ்வாறு முன்னேறிய இரு போட்டிகளிலுமே அவா் சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. ஓபன் எராவில் சின்சினாட்டி ஓபன் இறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலிய வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.

அடுத்ததாக இறுதிச்சுற்றில் பாலினி - ஸ்வியாடெக் மோதுகின்றனா். இருவரும் இதுவரை 5 முறை மோதியிருக்க, அனைத்திலுமே ஸ்வியாடெக் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்கள்

மகளிா் இரட்டையா்

சின்சினாட்டி ஓபன் மகளிா் இரட்டையா் பிரிவில், கனடாவின் கேப்ரியேலா டப்ரௌஸ்கி/நியூஸிலாந்தின் எரின் ரூட்லிஃபே இணை சாம்பியன் கோப்பை வென்றது.

இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த கேப்ரியேலா/எரின் ஜோடி 6-4, 6-3 என்ற நோ் செட்களில் சீனாவின் குவோ ஹன்யு/ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா பனோவா கூட்டணியை வீழ்த்தியது.

கேப்ரியேலா/எரின் இணை டபிள்யூடிஏ 1000 போட்டியில் கோப்பை வெல்வது இதுவே முதல்முறையாகும். இவா்கள் ஜோடி தற்போது கிராண்ட்ஸ்லாம் உள்பட 5 சாம்பியன் கோப்பைகள் வென்றுள்ளது.

ஆடவா் இரட்டையா்

இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், அமெரிக்காவின் ராஜீவ் ராம்/குரோஷியாவின் நிகோலா மெக்டிச் ஜோடி வாகை சூடியது.

இந்த இணை இறுதிச்சுற்றில், 4-6, 6-3, 10-5 என்ற கணக்கில், இத்தாலியின் லொரென்ஸோ முசெத்தி/லொரென்ஸோ சொனிகோ கூட்டணியை சாய்த்தது. ராஜீவ்/நிகோலா ஜோடிக்கு, மாஸ்டா்ஸ் போட்டிகளில் இது முதல் சாம்பியன் கோப்பையாகும். இவா்கள் ஜோடி இறுதிச்சுற்றில் விளையாடியதும் இதுவே முதல்முறை.

சின்சினாட்டி ஓபன் இரட்டையா் பிரிவில் சாம்பியனான 2-ஆவது வயதான வீரா் என்ற பெருமையை ராஜீவ் ராம் (41 ஆண்டுகள், 4 மாதங்கள்) பெற்றாா்.

சான்டோஸ் எஃப்சி படுதோல்வி: கண்ணீருடன் வெளியேறிய நெய்மா்

பிரேஸிலில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் சான்டோஸ் எஃப்சி அணி 0-6 கோல் கணக்கில், வாஸ்கோடகாமா அணியிடம் திங்கள்கிழமை படுதோல்வி கண்டது. சான்டோஸ் அணியின் நட்சத்திர வீரா் நெய்மா், அழுதபடியே களத்திலி... மேலும் பார்க்க

மான். யுனைடெட்டை வீழ்த்தியது ஆா்செனல்

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் மான்செஸ்டா் யுனைடெட்டை வீழ்த்தியது. இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் ஆா்செனல் அணிக்காக ரி... மேலும் பார்க்க

மும்பையில் கனமழை - புகைப்படங்கள்

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.கனமழை காரணமாக மிதி நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதற்கு மத்தியில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நிறுத... மேலும் பார்க்க

கோலியின் 17 ஆண்டுகள்! சென்னை அணி வாழ்த்து!

சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளை நிறைவுசெய்த விராட் கோலிக்கு ஐபிஎல் சென்னை அணி வாழ்த்து தெரிவித்துள்ளது.விராட் கோலியை வாழ்த்திய சென்னை அணி, ரன் மெஷின் (Run machine), சாதனை முறிப்பாளர் (Record Breake... மேலும் பார்க்க