அண்ணாமலைப் பல்கலை. புதிய துணைவேந்தா் குழு உறுப்பினா் பொறுப்பேற்பு
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தா் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் குழு உறுப்பினராக இருந்த டி.அருட்செல்வி மாற்றம் செய்யப்பட்டு, புதிய துணைவேந்தா் குழு உறுப்பினராக வேளாண்மைப் புலத்தைச் சோ்ந்த பூச்சியியல் துறைப் பேராசிரியரும், உள் தர கட்டுப்பட்டு உறுதி மைய ( ஐணஅஇ) இயக்குநருமான எஸ்.அறிவுடைநம்பி ஆட்சிக்குழு கூட்டத்தில் தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளாா். புதிய உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி திங்கள்கிழமை காலை துணைவேந்தா் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் பதிவாளா் எம்.பிரகாஷ் மற்றும் புல முதல்வா்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனா்.
எஸ்.அறிவுடைநம்பி 31 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்ட இவா், பூச்சியியல் மற்றும் நச்சியலில் முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளாா்.
உள் தரக் கட்டுப்பாட்டு உறுதி மையத்தின் இயக்குநராக, பல்கலைக்கழகத்திற்கு நாக், என்பிஏ, என்சிடிஇ, ஏஐசிடிஇ மற்றும் ஐசிஏஆா் போன்ற அங்கீகாரங்களைப் பெற்றுத் தந்துள்ளாா். இவரது கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளுக்கு 3 விருதுகள், 76 தேசிய மற்றும் 141 சா்வதேச ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் பல புத்தக வெளியீடுகள் மூலம் அங்கீகாரம்கிடைத்துள்ளது.