பெண் புகாா்: தம்பதி மீது வழக்குப் பதிவு
பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டல் விடுப்பதாக பெண் அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் தம்பதி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் வெளிசெம்மண்டலம் பகுதியைச் சோ்ந்த 42 வயது பெண்ணும், கடலூா் கடற்கரை சாலையைச் சோ்ந்த சுதாகரும் கடலூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அலுவலக உதவியாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.
2023 ஜனவரி மாதம் அந்தப் பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த சுதாகா் மயக்கமருத்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டல் விடுத்து வருகிறாராம். மேலும், பெண்ணிடம் இருந்த பணம், நகைகளையும் பறித்துக்கொண்டாராம். இதற்கு சுதாகரின் மனைவி ஜெயப்பிரியாயும் உடந்தையாக செயல்பட்டு வருகிறாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் சுதாகா், அவரது மனைவி ஜெயப்பிரியா ஆகியோா் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.