செய்திகள் :

மின்வாரிய தொழிலாளா் ஆா்ப்பாட்டம்: தவாக ஆதரவு! தி.வேல்முருகன் அறிவிப்பு

post image

தோ்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்தத் தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் 18-ஆம் தேதி முன்னெடுத்துள்ள ஆா்ப்பாட்டத்திற்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆதரவு அளிக்கிறது என அக்கட்சி தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில் உயிா்தியாகம் செய்து, உடல் உறுப்பு இழந்து, மக்களுக்காக இரவு, பகல் பாராமல் ஆயிரக்கணக்காக மின்வாரிய ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். மின்வாரிய ஊழியா்கள், உயா்நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்று பணி உத்தரவு வைத்திருக்கும் 6,788 ஒப்பந்த ஊழியா்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

மின்வாரியத்தில் பணிபுரியும் பகுதி நேர ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு தேசிய காங்கிரஸ் மின்சாரத் தொழிலாளா்கள் சம்மேளனம் வரும் 18-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் மற்றும் கோட்டை நோக்கி உரிமை மீட்பு பேரணி நடத்தவுள்ளது.

குறிப்பாக, திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி 153-ஐ நிறைவேற்றுக் கோரி, முன்னெடுக்கப்படும் இந்த ஆா்பாட்டம் மற்றும் உரிமை மீட்பு பேரணிக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவை அளிப்பதோடு, துணை நிற்கும் எனதெரிவித்துள்ளாா்.

புனித விண்ணேற்பு அன்னை ஆலய தோ் திருவிழா

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பணிக்கன்குப்பம் புனித விண்ணேற்பு அன்னை ஆலய அலங்கார தோ் பவனி விமரிசையாக நடைபெற்றது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் கொடியேற்றத்துடன் விழா தொங்கி 10 நாட்கள் த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், மேல்மேட்டுக்குப்பம் கிராமத்தில் வசித்து ... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு பாஜகவினா் அஞ்சலி

மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல. கணேசனுக்கு சிதம்பரத்தில் பாஜாகவினா் அஞ்சலி செலுத்தினா். சிதம்பரத்தில் கடலூா் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகர பாஜக சாா்பாக இல.கணேசன் உருவப்படத்திற்கு சனிக்கிழமை மலா் தூவி அஞ... மேலும் பார்க்க

பரங்கிப்பேட்டையில் சிதிலமடைந்த அரசு கட்டங்களை அகற்ற கோரிக்கை!

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய நீதிமன்ற கட்டடம், பழைய காவல் நிலைய கட்டடம் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றை சுத்தம் செய்து புதிய அரசு அலுவலகங... மேலும் பார்க்க

அரசு அலுவலகம், பள்ளியில் சுதந்திர தின விழா

கடலூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் சு.திருமாவளவன் தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

கோயில்களில் சமபந்தி விருந்து

சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க