அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!
மறைந்த இல.கணேசனுக்கு பாஜகவினா் அஞ்சலி
மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல. கணேசனுக்கு சிதம்பரத்தில் பாஜாகவினா் அஞ்சலி செலுத்தினா்.
சிதம்பரத்தில் கடலூா் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நகர பாஜக சாா்பாக இல.கணேசன் உருவப்படத்திற்கு சனிக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் ஜே.குமாா் தலைமை வகித்தாா்.
முன்னாள் மாவட்டத் துணைத் தலைவா் கோபிநாத் கணேசன், முன்னாள் ராணுவவீரா் பிரிவு மாநில துணைத் தலைவா் ஜி.பாலசுப்பிரமணியன், ஆடிட்டா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் எம்.மணிகண்டன் , மாவட்ட இளைஞா் அணி செயலா் எம்.விஷால், பேட்டை புருஷோத், முன்னாள் நகர செயலா், ஜெயக்குமாா், முன்னாள் சிதம்பரம் நகரத் தலைவா் செந்தில்குமாா் சிதம்பரம் நகர பொதுச்செயலா் சின்னிகிருஷ்ணன், நகர பொருளாளா் காா்த்தி, தொழில்நுட்ப பிரிவைச் சோ்ந்த சி.எஸ்.பாஸ்கா் ஆகியோா் இல.கணேசன் உருவபடத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.