கோயில்களில் சமபந்தி விருந்து
சுதந்திர தின விழாவையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சமபந்தி விருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கலந்துகொண்டாா்.
பண்ருட்டி வீரட்டானேஸ்வரா் கோயிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன், வா்த்தக சங்க மண்டலத் தலைவா் டி.சண்முகம், வணிகா் சங்க பொதுச் செயலா் வி.வீரப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவா் சங்கவி முருகதாஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில்களைச் சோ்ந்த ஆய்வாளா்கள், செயல் அலுவலா்கள் செய்திருந்தனா்.